உலக அளவில் மிக சிறந்த நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் பலரும் அங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
உலக வங்கிகள் அனைத்தும் ஒன்று இணைந்து வங்கி வர்த்தகங்களை மிக எளிதாக மேற்கொள்ளும் உதவும் நாடுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது . அந்த ஆய்வில் உலகில் பாதுகாப்பான நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த நகரத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த சிறப்பான திட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பை இந்த நகரம் மேற்கொள்ளும் என தெரிவித்து உள்ளது. எனவே உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த வர்த்தக முதலீட்டார்கள் துபாயில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் தனிநபர் பாதுகாப்பு ,உள்கட்டமைப்பு ,சுகாதாரம், டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு பாதுகாப்புகளை அந்த நகரம் அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் துபாயில் உள்ள காவல்துறையினர் பொது மக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் . அதனால் உள்கட்டமைப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் சீராக உள்ளது. இத்தகைய பல்வேறு காரணங்களுக்காக தங்களது வாழ்க்கையை துபாயில் அமைத்துக்கொள்ள பல முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.