Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. பிரமாண்டமாக பவனி வந்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

குண்டவெளி கிராமத்தில்  செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவையொட்டி சந்தனம், பால், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து கோவில் பிரகாரத்திலிருந்து செல்லியம்மன், விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். இதற்கான முழு  ஏற்பாடுகளையும்  கோவில் அறங்காவலர் மணிவண்ணன் மற்றும் ஊர் பொது மக்கள் சேர்ந்து செய்துள்ளனர்.

Categories

Tech |