Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கலையா…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் வாலிபர் கைது….!!

நெல்லையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

நெல்லை மாவட்டம் பேட்டையில் வரதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான வினோத் குமாரை காவல் துறையினர்கள் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்நிலையில் இவர் மீது குடிமைப் பொருள் வழங்கும் குற்ற புலனாய்வு பிரிவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் உள்ளிட்ட பலவிதமான வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்களின் அமைதியான சூழ்நிலைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வினோத்குமாரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கும் குற்றப்புலனாய்வு காவல் நிலைய சில முக்கிய அதிகாரிகள் நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனரான அன்பு அவர்களிடம் பரிந்துரைத்தனர்.

இவர்களின் பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் வினோத்குமாரை கள்ளச்சந்தை சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறையில் வினோத்குமார், கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்க்கான உத்தரவு சான்றிதழை ஒப்படைத்தனர்.

Categories

Tech |