தஞ்சையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சையில் கொரோனா பாதித்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்கள் 187 பேர், கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்த பள்ளிகளில் அல்லாமல் புதிதாக இரண்டு பள்ளிகளில் 7 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.