உடலின் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமையும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கோடைக்காலம் என்பதை வெயிலுக்கு மட்டுமல்லாமல் மாம்பழங்களுக்கும் பிரபலமானது. ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி மற்றும் நுங்கு அதிகமாக கிடைக்கும். கோடை காலத்தில் அதிக சுவையான பலன்கள் கிடைத்தாலும் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் மட்டுமே. அவ்வாறு ருசித்து சாப்பிடும் மாம்பழத்தில் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மாம்பழத்தின் நன்மைகள்:
மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். தோல்நோய் மற்றும் அரிப்பு போன்றவை வராது. தீராத தலைவலியை மாம்பழச்சாறு குணப்படுத்தும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணிக்க உதவுகிறது. பல் வலி மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும். இதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் ரத்தம் அதிகமாக ஊர உதவுகிறது.
மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அவற்றில் கொஞ்சம் பால், கொஞ்சம் ஐஸ் கட்டி மட்டும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸாக குடித்தால் நாக்குக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் உடலில் ஏற்படும் சில வகை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும். கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான நீர் வடிதல், கண்ண அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய்களை குணப்படுத்த மிகவும் உதவும்.
தினமும் மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி பிரச்சனை குணமாகும். சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தை இது தடுக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்புகளையும் குறைக்க உதவும். ரத்த சோகையை குணப்படுத்தும். இதயத்திற்கு நன்மை அளிக்கும். இவ்வாறு பல மருத்துவ குணங்கள் வாய்ந்த மாம்பழத்தை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.