அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் பாஜக எம்பியாக மாறிவிடுவீர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றியை தர மாட்டார்கள். அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
அப்படி வெற்றி பெற்றால் அவர்களும் பாஜக எம்எல்ஏவாக மாறிவிடுவார்கள் என்று திமுக தலைவர் குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்தாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் அதிமுக வென்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர்களாக மாறி விடுவார்கள் என்பதை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.