Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீயின் அடுத்த படத்தில் ஷாருக்கான்…. வைரலாகும் ஸ்கிரிப்ட் புகைப்படம்…!!

உதவி இயக்குனர்களிடம் அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அதன்படி அப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் அட்லீயின் மனைவி ப்ரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது அட்லீ ஷாருக்கான் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்துவருகிறார் போல தெரிகிறது.

கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள அட்லீ

அந்த வீடியோவில் அட்லீ ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்து படத்திற்கான கதை விவரத்தை உதவி இயக்குனர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |