Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள்… தென்னக ரயில்வே அறிவிப்பு..!!

தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா நடைமுறைக்கு வந்தபிறகு சிறப்பு ரயில்கள் மட்டும் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதி என்பதால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் மற்றும் தேதி போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் விபரம் பின்வருமாறு :-

1. தாம்பரம் – நாகர்கோயில் இடையே அடுத்த மாதம் 26 முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்

2..அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 முதல் இயக்கம்

3.புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் இயக்கம்

4.புதுச்சேரி – மங்களூரு வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கம்

5. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் ஒருமுறை விரைவு ரயில் ஏப்ரல் 16 முதல் இயக்கம்

6. மதுரை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 17 முதல் இயக்கப்படுகிறது

7. மதுரை – ஹஷ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் இயக்கம்

8. கோவை – பெங்களூரு வாரம் 6 நாட்கள் விரைவு ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்

9. கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்

10. சென்னை சென்ட்ரல் – ஹஷ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் வாரம் ஒருமுறை ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |