Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டுக்கு போயிருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… சிவகங்கையில் இளம்பெண் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சி.மெ. வீதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். கல்யாணி சம்பவத்தன்று மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து நடந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகாளியம்மன் கோவில் அருகே இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் கல்யாணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து கல்யாணி காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |