சிவகங்கை தேவகோட்டை அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சந்தானலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அனைத்து கோவில்களிலும் பங்குனி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கருவறையில் இருக்கும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாமியாடி பெரியகருப்பன் தெருவில் சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பங்குனி மாதத்தின் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு செய்யப்பட்டது. மேலும் வண்ண பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டார். இந்த பங்குனி மாதத்தில் முன்னிட்டு அம்மனுக்கு சந்தான லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் அலங்காரத்தில் அம்மன் வீற்றிருப்பதைக் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.