Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்லூரியின் 51-ஆவது விளையாட்டு விழா… வெற்றி பரிசை தட்டிச் சென்ற மாணவர்கள்..!!

சிவகங்கை இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 51-வது விளையாட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆட்சிக் குழு தலைவர் முகமது சுபைர் தலைமையில் 51-வது விளையாட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் வாழ்த்துரை கூறினார். தேனி கனரா வங்கியின் மண்டல மேலாளர் காளிராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த கல்லூரியின் முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்புரையாற்றினார். இதையடுத்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பத்திரங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உடற்கல்வி இயக்குனர் காஜா நஜிமுதீன், காளிதாசன், வெற்றி ஆகிய பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Categories

Tech |