சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் க்யூட்டாக இருக்கும் ரக்ஷனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த வாரம் இறுதிச்சுற்றிற்க்கு கனி,அஸ்வின்,பாபா பாஸ்கர் ஆகிய 3 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இது ரக்ஷனா? என்று கேள்வி கேட்கும் வகையில் அவர் இருக்கிறார்.ஏனென்றால் அதில் மீசை தாடி இல்லாமல் மிகவும் க்யூட்டாக உள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது மிகவும் பிரபல நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.