சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி டைட்டில் வென்ற பிரியங்கா இதன்பின் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடினார் . மேலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடகி பிரியங்கா மிகச் சிறந்த பாடகி மட்டுமின்றி ஒரு பல் டாக்டர் என்பது பலரும் அறியாத உண்மையாக உள்ளது.
இந்நிலையில் பிரியங்கா ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் அவர் ஏழை எளியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல் பரிசோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . மனித நேயத்துடன் சமூக சேவை செய்து வரும் சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.