நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை ஆங்காங்கே நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக பதற்றமான பகுதிகளில் துணைராணுவத்தினரும் காவல்துறையினர்களும் சேர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதாவது ராமையாம்பட்டி, வாகைகுளம் உட்பட 28 வாக்குச்சாவடி நிலையங்களை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் அதிகாரிகளுக்கு மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையும் வழங்கியுள்ளார்.