கலிபோர்னியாவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு பணத்தை திருடி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சன்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சிறுமி ஒருவர் இணையம் வழியாக கல்வி கற்பதற்காக அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த சிறுமியை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் வீட்டினுள் சிறுமி தனியாக இருக்கும் போது அவரை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் கேமெராக்களை கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளரின் காரையும் எரித்து நாசம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாத்ரூமில் அடைபட்டுக் கிடந்த சிறுமி தனக்கு ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் அங்குள்ள கதவில் உதவி, திருடர்கள் என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த உரிமையாளர் பாத்ரூமில் அடைபட்டுக் கிடந்த சிறுமியை மீட்டுள்ளார். அதன் பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இது ஆசியர்களின் இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.