சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் தீயணைப்புத்துறையினர், முன்னாள் மத்திய ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் சிறைத் துறையினர், முன்னாள் வனத்துறையினர் சிவகங்கை மாவட்ட காவல் நிலையத்தில் வருகின்ற 25-ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் பெயர்களை பதிவு செய்வதற்காக 8300001277, 04575-243265 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தபால் மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.