Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ..!! என்னடா இது, இவ்வளவையும் எங்க வச்சிருக்காங்க…. லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யும் பறக்கும் படை…. அதிரும் தேர்தல் களம்….!!

நெல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 2,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்குசேகரிப்பாளர்கள் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது அல்லது பணம் கொடுப்பது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை அமைத்துள்ளார்கள். இதனால் இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் டவுனில் பறக்கும் படை அதிகாரியான வேலப்பன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாள்சாமி என்பவர் உரிய ஆவணமின்றி 2,00,000ரூபாயை கொண்டு வந்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அப்பணத்தினை பறிமுதல் செய்து, திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தார்கள். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தினைப் பெற்று செல்லுமாறு உரிமையாளரிடம் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |