சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்று வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.மூன்றாம் இடத்தில் பாபர் அசாம், நான்காவது இடத்தில் விராட்கோலி, ஐந்தாவது இடத்தில் கே எல் ராகுல் இடம்பிடித்துள்ளனர்.