சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய நோய் பரவியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் 33 ஆயிரத்து 85 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர்.
இதில் 32 ஆயிரத்து 410 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்ததனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக குறைத்த தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தார்.