நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் புதிய இரட்டை உருமாறிய மாறுபட்ட கொரோனா நாட்டின் 18 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனாவை அடுத்து பலவகையான உருமாறிய கொரோனா பரவுவதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.