Categories
உலக செய்திகள்

கோழிகளை கொல்ல தடையா ?ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அரசாங்கம் போட்ட சட்டம் ..!!கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் இஸ்லாமியர்கள் ..!!

பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோழிகளை கொல்வதற்கு தடை விதித்க்கவுள்ளதால்  இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கோழிகளை கொல்வதற்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி கோழிகளை கழுத்திலுள்ள சுவாசக் குழாயை துண்டித்து பிறகு கோழிகளை கொல்ல வேண்டும் .ஆனால் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர் .ஐரோப்பிய வழக்கப்படி கோழிகளை  ஸ்டன் கன் எனும் கருவி மூலம் அவற்றை செயலிழக்க வைத்து பிறகு கொல்ல வேண்டும் .

இதனை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அறிக்கையில் ரமலான் மாதம் நெருங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இவ்வாறு உணவு அமைச்சகத்தின் சுற்றிக்கை மற்றும் பிரெஞ்சு வேளாண்மை இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக செய்தி அளித்துள்ளது . இந்த நடவடிக்கையால் மக்களின் சுதந்திரம் தடுக்க  கூடியதாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |