தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக ரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால்தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் வருகிற 31-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகள் மூன்றாவது முறையாக ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.