சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்த காவல் துறையினர்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தொற்றை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாஸ்க் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருப்பவர்கள் என அனைவரிடத்திலும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் ஒருவருக்கு 200 ரூபாய் என 10 பேரிடமிருந்து 2000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.