Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கா …முதல்வர் பேசிய வீடியோ …இணையத்தில் வைரல் …!!!

 ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிகள்  செயல்படுத்தப்படும் என்று ,வீடியோ ஒன்றில் கர்நாடக முதலைமைச்சர் பேசியிருப்பது  இணையத்தில் வைரலாகியது .

கர்நாடகா முதலமைச்சர்  எடியூரப்பா பேசியே 2.20 நிமிடங்கள் பதிவுடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் முதல்வர் கொரோனா தொற்றின்  காரணமாக ,கர்நாடக மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிகள் அமல்படுத்துவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மாநிலத்திலுள்ள மதுபான திரையரங்குகள், மால்கள்,  மதுபான கடைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு சம்பந்தமான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படாது, என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் அந்த மாநிலத்தில் இந்த வீடியோவை பற்றி  பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, முதல்வர் பேசிய இந்த வீடியோவானது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேசிய வீடியோ என்றும், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 12 ,13 இரு தேதிகளில் பதிவிடப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. எனவே சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என உறுதி செய்தனர். இதன் காரணமாக கர்நாடக அரசு போலியான செய்திகளை யாரும் பொதுமக்களிடம், பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

Categories

Tech |