தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பணமூட்டையை நம்பியே அதிமுக தேர்தலை சந்திக்கிறது. முதியோர் உதவித் தொகையை சரியாக வழங்காத அதிமுக அரசு குடும்பத்தலைவிகளுக்கு எப்படி மாத உதவித் தொகை வழங்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.