இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்த நகரத்தின் மீது திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள Beersheba என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்திருந்தார். அப்போது Gaza நகரத்திலிருந்து பிரதமர் வருகை புரிந்த Beersheba நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளி பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவிதமான விவரங்களும் வெளிவரவில்லை. ராக்கெட் தாக்குதலின்போது உணவகத்தில் இருந்த பிரதமரை பாதுகாப்பாளர்கள் பத்திரமாக அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. திடீரென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1374418526950191114