நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது .
Dedicating #Sulthan trailer to all my fans who have been cheering and supporting me all the time. Love you all! Here it is!#SulthanTrailer – https://t.co/Twam1DKN6q #SulthanFromApril2
— Karthi (@Karthi_Offl) March 24, 2021
மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் சுல்தான் படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மிரட்டும் வில்லன்கள் என தெறிக்கவிடும் இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .