Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மூன்று பேர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றனர். இந்நிலையில் 14 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் பின்வருமாறு;-

மயிலாடுதுறை

1. அ.ம.மு.க. – கோமல் அன்பரசன்

2. சுயேச்சை- லோகசம்பத்

3. பா.ம.க. (அ.தி.மு.க. கூட்டணி)- சித்தமல்லி பழனிச்சாமி

4. சுயேச்சை- நிரஞ்சன்

5. தமிழ்நாடு இளைஞர் கட்சி – ராஜ்குமார்

6. சுயச்சை- ராஜேந்திரன்

7. மக்கள் நீதி மய்யம்- ரவிச்சந்திரன்

8. நாம் தமிழர் கட்சி- காசிராமன்

9. காங்கிரஸ் (தி.மு.க. கூட்டணி)- ராஜகுமார்

10. சுயேச்சை- பாபு சங்கர்

11. பகுஜன் சமாஜ் கட்சி- சம்சுதீன்

12. சுயேச்சை- மணிமாறன்

13. சுயேச்சை- தீமோத்தேயு

14. சுயேச்சை- கணேசன்

Categories

Tech |