ஜெர்மனியில் அமைந்துள்ள Wilhelmstein தீவின் வரலாறை இங்கு காண்போம்.
ஜெர்மனியில் Steinhude என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நடுவே Wilhelmstein என்ற சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்த தீவின் புகைப்படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை வருகிறது. இங்கு ஹோட்டல், அருங்காட்சியகம் என பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கிறது. இந்த தீவின் வரலாறு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.
- Wilhelmstein தீவு முதன் முதலில் ராணுவ தளமாக இருந்தது.
- இது இயற்கையாக உருவானது அல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுதான்.
- இந்த தீவானது தண்ணீருக்கு நடுவே கற்கள் மீது கட்டப்பட்டுள்ளது.
- இந்த தீவை உருவாக்குவதற்கு 5 ஆண்டுகள் ஆனதாம்.
- மேலிருந்து பார்ப்பதற்கு அங்குள்ள கோட்டை நட்சத்திர வடிவில் இருக்கிறது.
- ராணுவப் பயிற்சிப் பள்ளியும் ஒன்று இந்த தீவில் உள்ளது.
மேலும் ஜெர்மனியின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் இந்த தீவில் நான் உருவாக்கப்பட்டதாம் . இந்த தீவிற்கு என்று மற்றொரு சிறப்பம்சம் இருக்கின்றது. அது என்னவென்றால், இந்த தீவிற்கு நடந்ததே செல்ல முடியுமாம். ஏனெனில் குளிர்காலத்தில் இந்த தீவைச் சுற்றியுள்ள ஏரியின் தண்ணீர் உறைந்து விடும். அப்போது மக்கள் இங்கு நடந்தே செல்வார்கள். ஆனால் மற்ற நேரத்தில் இங்கு வருவதற்காக படகுப் போக்குவரத்து வசதி உள்ளது.