நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.