Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மாதான் நின்னாங்கனு நெனச்சோம்…. அதுக்கு அப்புறம் தான் உண்மை தெரிஞ்சுது…. கண்டுபிடித்து கைது செய்த காவல் துறையினர்….!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் அமைத்துள்ளார்கள். இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்டம் வல்லநாட்டில் காவல்துறையினர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மூல வைகை ஆற்றுப் பாலத்திற்கு பக்கத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 வாலிபர்கள் நின்றிருக்கிறார்கள். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பிறகு நான்கு பேரையும் கைது செய்ததோடு 2 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |