Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?… வெளியான தகவல்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

actor karthi to act for suriya's 2D entertainment சூர்யா தயாரிப்பில் நடிக்கும் கார்த்தி

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் கார்த்தி முத்தையாவுடன் இணைய இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

Categories

Tech |