சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் தயாராகி வருகிறது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. எந்திரன், காஞ்சனா 3, பேட்ட, சர்க்கார், நம்ம வீட்டு பிள்ளை என பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பல கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது 5 முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் தளபதி 65, சூர்யாவின் சூர்யா 40, தனுஷின் D44, விஜய் சேதுபதியின் VJS 46 ஆகிய ஐந்து படங்களை தயாரித்து வருகிறது. இந்த 5 படங்களுமே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வெற்றி படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.