ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை ரத்து செய்ய அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரசால் உலகநாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால் ஏஞ்சலா மெர்கல் நேற்று சில தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஞ்சலா மெர்க்கலின் இந்த அறிவிப்பானது நாட்டு மக்களின் கோபத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.