கனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலுள்ள மொண்ட்ரியலை சேர்ந்த 29 வயதான ரிபாக்கி ஹரி வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்றபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரிபாக்கி இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் 32 வயதான பிராண்டன் மெக்லிண்டயர் எனும் அவரின் காதலனும் இருந்துள்ளார்.
பிறகு ரிபாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே பிராண்டன் போதை மருந்து மற்றும் கொள்ளை வழக்கில் போலீசில் சிக்கியுள்ளார். தற்போது காதலியை தாக்கியதால் போலீசால் கைது செய்யபட்டு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.