Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் ஏற்பட்ட உயிரிழப்பு… இழுத்து மூடப்பட்ட ஜவுளிக்கடை… மாவட்ட நிர்வாகம் அதிரடி..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவத்தால் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் முதல் கட்டமாக கொரோனா வேகமாக பரவி வந்தது. அதனை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு போடப்பட்டது. இதனால் கொரோனா ஓரளவிற்கு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இரண்டாவது அலையாக மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் வசித்து வந்த ஜவுளி கடை உரிமையாளருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அந்த ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் ஜவுளி கடையை மூடி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜவுளி கடை உரிமையாளரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |