Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இந்த இத செஞ்சி எட்டு வருஷம் ஆச்சு”, இன்னும் முடிஞ்ச பாடில்லை…. தேர்தலைப் புறக்க கணிக்க கருப்பு கொடி ஏற்றம்…. போலிஸ் சமரசப் பேச்சு….!!

தேனியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக பொதுமக்கள் வீட்டில் கருப்புக் கொடியை கட்டியுள்ளார்கள்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் ஒன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டும் வேலையை தொடங்கியுள்ளார்கள். அப்போது கண்டமனூர் வனத்துறையினர்கள் கோவிலை கட்டும் பகுதி வனத்துறையின் கட்டுக்குள் உள்ளதாக கூறி பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலையும் இடித்து தள்ளியுள்ளார்கள். இதனால் வனதுறையினரை பொதுமக்கள் முற்றுகை செய்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் வனத்துறையினர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் அரசுப் பணியை செய்யவிடாமல் இடையூறு செய்ததாக கூறி புகார் கொடுத்துள்ளார்கள்.

இதனால் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளர்கள். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தற்போது தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக் கொடிகளை வீடுகளில் கட்டியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, அவர்கள் முன்னதாக கோவில் கட்டும் பணியில் வழக்குப் பதிவு செய்து 8 ஆண்டுகள் ஆகியும் அதனை முடித்து வைக்க எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்கள். இதனைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்கை முடித்துவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் கருப்புக் கொடியை அகற்றியுள்ளார்கள்.

Categories

Tech |