தேர்தல் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அதிகரித்துக் காட்டுவதாக வதந்திகள் தெரிவிக்கின்றனர். இதை நம்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க கொரோனாவும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தேர்தல் ரத்து செய்யும் நோக்கில் கொரோனா எண்ணிக்கையை அரசு அதிகரித்து காட்டுவதாக சில சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புகின்றனர். வரிந்து பரப்புவோர் நேரில் வந்தால் கவச உடை அணிவித்து நோயாளிகளை காண்பிக்க தயார் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறாத மகாராஷ்டிர டெல்லியில் தொற்று ஏன் அதிகரிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.