கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை சென்னை மருத்துவக் கல்லூரி தலைவர் விளக்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி தேரணிராஜ் பொதுவாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனேயே எதிர்ப்புசக்தி உருவாவதில்லை.
தடுப்பூசி போட்டவுடன் எதிர்ப்பு சக்தி உருவாகக்கூடிய இடைப்பட்ட நாட்களில் கூட கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். தடுப்பூசி போட்ட ஓரிரண்டு நாட்களில் சாதாரணமான காய்ச்சல் ஏற்படும். மேலும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்களுக்கு 100% கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாகக் கூற முடியாது. இதனிடையில் மது குடிக்கும் ஆண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாள் சுமார் 72 மணி நேரத்திற்கு மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.