நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயது உடைய பல்வேறு நோய் தாக்குதல் உள்ளவர்களுக்கு போடப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் நோய் பரவுதல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு விரைவு படுத்துவதற்காக திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் இருப்பில் இல்லாத காரணத்தினால் இதனை தயாரிக்கும் 2 நிறுவனங்களையும் உற்பத்தியை அதிகப்படுத்த கோரி மத்திய அரசு கேட்டுக் கொண்டு வருகிறது.
மக்களின் நலனைக் கருதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறை மருந்து தயாரிப்பு துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உயிரி தொழில்நுட்பத்துறை இந்தோ ஆராய்ச்சி கலகம் போன்றவைகளின் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இந்த நிபுணர் குழு கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு தயாரிக்கும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்பூன வல்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டபோது நிர்வாக அதிகாரி மருந்து தயாரிக்கும் உபகரணங்கள் அனைத்தும் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டியது இருக்கிறது.
தடுப்பூசி தயாரிக்க முக்கியமாக பைகள் அரிப்புகள் கண்ணாடி பொருட்கள் பாட்டில் தலை பகுதியில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் போன்றவைகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது அமெரிக்கா இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ஆகையால் இந்த உபகரணங்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அதிகாரி ஆதர்பூன கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி அனைத்து உபகரணங்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று கோவேக்சின் தடுப்பு மருந்தை தயாரித்து வரும் பாரத் பயோடெக் அதிகாரிகளிடம் இந்த நிபுணர் குழு ஆலோசனை மேற்கொண்டது. அவர்களும் மருந்து உற்பத்தியை அதிகரித்து தருவது குறித்து பேசியுள்ளனர். இந்தியாவில் இந்த ஆண்டு இரண்டாவது 6 மாதத்தில்மக்களுக்கு செலுத்தப்பட்ட டோஸ் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அறிவித்துள்ளனர்.
.