Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! பணியில் கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பொறுமையுடன் எதையும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

இன்று நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுக்கு காரியங்களில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் இன்று உங்களுக்கு பெருமை சேரும். பிள்ளைகள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். தாமதமாக நடக்கக் கூடிய காரியங்கள் கூட இன்று உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் கொஞ்சம் பிரச்சினை வரக்கூடும். தயவுசெய்து கணக்கு வழக்குகளை நீங்கள் இப்பொழுது பார்க்க வேண்டாம். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தொலைந்து போன பொருட்கள் கூட கையில் வந்து சேரும். இன்று உங்களுக்கு அனைத்து விதமான நல்ல செய்திகளும் வந்து சேரும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலதிகாரியின் கண்டிப்புக்கு நீங்கள் ஆளாக நேரலாம். தொழிலதிபர்கள் நினைத்தபடி புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவார்கள். ஒப்பந்தத்தை சரியான முறையில் படித்து பார்த்து பின்னர் கையப்பம் இடுவது சிறந்தது. இன்று நீங்கள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எதுவும் பெரிதாக இல்லை. எல்லாமே சுமுகமாகவே உள்ளது. இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். காதலின் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். மாணவ மாணவியர்கள் எதையும் துணிச்சலுடன் எதையும் செய்து முடிப்பார்கள். இன்று நீங்கள் ஆசிரியருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது சிறந்தது. இன்று நீங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது சிறந்தது. படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கருநீலம் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. கரும் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமானதிசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |