நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் நாகை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சுயேச்சைகள், நாடாளும் மக்கள் கட்சி சிவனேசன் என 13 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை யாரும் திரும்பப் பெறவில்லை. நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்:
1. முகமது ஷா நவாஸ்- (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
2. மஞ்சுளா- (அ.ம.மு.க.)
3. சிங்கார வடிவேலன்- (சிவசேனா கட்சி)
4. மணிகண்டன்- (சுயேச்சை)
5. கனகராஜு- (சுயேச்சை)
6. மயிலரசி- (நாடாளும் மக்கள் கட்சி)
7. செய்யது அனஸ்- (மக்கள் நீதி மையம் கட்சி)
8. பிரேம்- (சுயேச்சை)
9. அகஸ்டின் அற்புதராஜ்- (நாம் தமிழர் கட்சி)
10. தங்க கதிரவன் (அ.தி.மு.க.)
11. செல்வராஜ்- (சுயேச்சை)
12. துரை- (மக்களாட்சிக் கட்சி)
13. பாஸ்கரன்- (சுயேச்சை)