பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் வேலை கிடைக்காத காரணத்தினாலும், போதிய அளவு சம்பளம் கிடைக்காததாலும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். தங்களுடைய மனைவி, பிள்ளைகளை வருடக்கணக்கில் தவிக்க விட்டு விட்டு வெளிநாட்டில் சென்று கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதாவது உடல்நல கோளாறு காரணமாகவும் சிலர் உயிரிழந்து விடுகின்றனர்.
இந்நிலையில் துபாய் மற்றும் அமீரக பகுதிகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் உயிரிழந்த இந்தியர்களில் 10இல் 6 பேருக்கு இதய நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகள், வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை. இதில் சில அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 131 பேரில் 57 பேர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.