இந்தியாவின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. அந்த வட்டி மானியத்தை வீடு கட்ட கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்று கொள்ளலாம்.
இந்நிலையில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை பயன்படுத்தி வாத்வான் சகோதரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் அவர்கள் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.6லட்சத்திற்கும் அதிகமான போலி வீட்டு கடன் கணக்குகளை தொடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது சிபிஐ கண்டுபிடித்துள்ளது.