Categories
மாநில செய்திகள்

இனி இங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மினி கிளினிக்குகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்.

தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,217 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1,900 மினி கிளினிக்குகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |