தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படாமல் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். மூன்றாவது முறையாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும். மேலும் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் வருகின்ற 31ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.