திருமானூரில் வைக்கோல் ஏற்றி செல்லும் போது மின்கம்பிகள் மீது வைக்கோல் உரசி தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நெல் அறுவடை செய்து, வயலிலிருந்து வைக்கோல் கட்டுகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர். இதனையடுத்து வயல்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது மின் கம்பிகள் வைக்கோல் மீது உரசி எதிர்பாரத விதமாக தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் தீயை அணைக்க முயன்றுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து விட்டனர். ஆனால் வைக்கோல் கட்டுகள் மற்றும் சரக்கு ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்து சாம்பலானது.