செந்தூரப்பூவே சீரியல் நடிகையின் ஆண் வேட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூர பூவே சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி நடித்து வருகிறார். ஸ்ரீநிதி சீரியலில் நடித்து வருவது மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியான முரட்டு சிங்கிலிலும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கிருஷ்ணன் போல ஆண் வேடமிட்டு அழகாக உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இதனை சேர் செய்து வருகின்றனர்.