Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

இது தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்துவந்த…. துரோகத்தின் உச்சக்கட்டம் – மத்திய அரசை விமர்சித்த கமல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல், “ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு நழுவி இருக்கிறது. இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மத்திய அரசு இதுவரை செய்துவந்த துரோகத்தின் உச்சகட்டம் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |