ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறார். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் விடுதலை குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் இன்று 11 : 45 மணி அளவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசயிருக்கிறார். அவருடன் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் சென்று பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது